மறைபரப்பு ஞாயிறை சிறப்பித்து யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கார்த்திகை மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற சந்தை நிகழ்வில் அத்தியாவசியப் பொருட்கள், இறைச்சி, மீன், மரக்கறி வகைகள், உணவுப்பொருட்கள், பானங்கள், பாடசாலை உபகரணங்கள், பூக்கன்றுகள் என்பன விற்பனை செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin