நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழாவை சிறப்பித்து யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ் மன்றம் முன்னெடுத்த செந்தமிழ் விழா யூலை மாதம் 12ஆம் ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருமட மாணவர்கள் இரு அணிகளாக பிரிந்து கலைநிகழ்வுகளை முன்னெடுத்தனர்.

கலைநிகழ்வுகளில் கவிதை, பாடல்கள், நாடகங்களுடன் “தமிழுக்கு அழகு சேர்ப்பது மரபு கவிதையா புதுக்கவிதையா” என்னும் தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றதுடன் செந்தமிழ் விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் முதன்மை அன்பாளராகவும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்கள் சிறப்பு தமிழ் விரும்பியாகவும் திருமறைக்கலாமன்ற நிர்வாக சபை உறுப்பினர் திரு. தைரியநாதன் யஸ்ரின் ஜெலூட் அவர்கள் மேன்மைமிகு தமிழ் அன்பராகவும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

 

By admin