யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தின நிகழ்வு பங்குனி மாதம் 17ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரி சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமையில் திருநாள் திருப்பலியும் தொடர்ந்து இல்லங்களுக்கிடையிலான காற்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டிகளும் இடம்பெற்றன.

இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்து செபித்தனர்.

அத்துடன் அன்றைய நாளை சிறப்பித்து மாலை பழைய மாணவர் சங்கத்தினரின் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 2024, 2025ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

By admin