யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டி பங்குனி மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 93 புள்ளிகளுடன் மத்தியூஸ் இல்லம் முதலிடத்தையும் 79 புள்ளிகளுடன் பொஞ்சீன் இல்லம் இரண்டாம் இடத்தையும் 75.5 புள்ளிகளுடன் லோங் இல்லம் மூன்றாம் இடத்தையும் 65.5 புள்ளிகளுடன் டண் இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவனும் லண்டன் MCC கிரிக்கெட் மத்தியஸ்தருமாகிய திரு. அன்ரன் சவிரிமுத்து அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin