யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு நிகழ்வு பங்குனி மாதம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் திரு. ஸ்ரனிஸ்லாஸ், திரு. சகாயராஜா, திருமதி. இராமகிருஸ்ணன், திருமதி. கலிஸ்ரா கிறிஸ்ரி ஆகியோர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து ஆசிரியர்களுக்கான பாராட்டுரைகளும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஏற்புரைகளும் இடம்பெற்றன.

By admin