யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் தின சிறப்பு நிகழ்வு மாசி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கௌரவிப்பும் இடம்பெற்றன. திருப்பலியை கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் கல்லூரி உப அதிபர் மகன் அலோசியஸ், யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம், ஒட்டகப்புலம் பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாஸ், அருட்தந்தை பிறாயன் ஆகியோர் இணைந்து செபித்தனர்.

இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், ஓய்வு நிலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோரென பலரும் கலந்துகொண்டனர்.

By admin