யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 09ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரியின் ஆயர் தியோகுப்பிள்ளை விளையாட்டரங்கில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு. மோகனதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் NTB வங்கியின் வடபிராந்திய கடன் தொடர்பு முகாமையாளர் திரு. பார்த்தீபன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அயற் பாடசாலை அதிபர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

