யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் முத்தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா புரட்டாதி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்ற தலைவர் செல்வன் மைக்கல் ஜெனுசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் பாடசாலை மட்ட தமிழ்தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றதுடன் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களின் ஆக்கங்களைத் தாங்கிய மந்தமாருதம் நூலின் ஆறாவது இதழும் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் கல்லூரியின் பழைய மாணவரும் சட்டத்தரணியுமான திரு. வினோராஜ் அவர்கள் இதழின் முதற்பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட கல்வியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. சத்தியகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மல்வம் – உடுவில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்கள் சிறப்பு கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

அத்துடன் யாழ்;;ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பெற்றோர் தின நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றன.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2024ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறப்பு சித்தி மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் Bolt crew Engineering Pvt. Ltd நிர்வாக இயக்குநர் திரு. டக்ளஸ் நிஜந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கலுபோவில போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திருமதி ஆன் டிலாந்தி நிஜந்தன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin