யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஆங்கில தினம் யூன் மாதம் 26ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரியின் மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மன்ற காப்பாளர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை தர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அதிபர் திருமதி றுசிறா குலசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் ஆங்கில மொழிப்புலமையையும் கலை ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் நாடகங்கள், பேச்சுக்கள், மேலைத்தேய இசை, வாத்திய நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ஆங்கில தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin