யாழ். புனித மரியன்னை பேராலய பங்கிற்குட்பட்ட புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 16ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
07ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநரும் கொழும்புத்துறை பங்குத்தந்தையுமான அருட்தந்தை மவுலிஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை அன்னையின் திருச்சொருப தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.