யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களின் கலைவிழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் நடன நிகழ்வுகளும் டொன் பொஸ்கோ திருவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகள் மற்றும் கலைநிகழ்வில் ஆற்றுகைசெய்யப்பட்ட சிறந்த நடனங்களிற்கான பரிசளிப்பும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.

