திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் திருப்பாலத்துவ சபை கொடியேற்றப்பட்டு திருப்பலியும் தொடர்ந்து சிறார்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

அத்துடன் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் மாசி மாதம் 09ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 46 பிள்ளைகள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin