யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஒளிவிழா மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் யாழ்ப்பாணம் செட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாசகம் மூத்தோர் இல்லத்தை தரிசித்து அங்குள்ள முதியவர்களுக்கு கலைநிகழ்வுகளை நிகழ்த்தியதுடன் அவர்களுக்கான ஒரு தொகுதி அன்பளிப்புக்களையும் வழங்கினர்.

By admin