யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையும் நல்லாயன் ஆன்மீக பணியகமும் இணைந்து முன்னெடுத்த கிறிஸ்மஸ் செப வழிபாடு மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

துறைத்தலைவர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரோல் கீதங்கள், தியானம், உரைகள், பரிசு பரிமாற்றம் என்பன இடம்பெற்றன.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா, தென்னிந்தியத் திருச்சபை ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை ஜெபநேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில கிறிஸ்தவ சபைகளின் கரோல் கீதங்களுடன் கிறிஸ்து பிறப்பு ஆன்மீக சிந்தனைகள், மதங்களின் ஒன்றிப்பில் கிறிஸ்து பிறப்பின் அர்த்தம் போன்றவற்றை உள்ளடக்கிய சிந்தனைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அருட்தந்தையர்கள் மாணவர்களென பலரும் கலந்துசெபித்தனர்.

By admin