யாழ். திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வுகள் 15ஆம் 17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.

15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வும் தொடர்ந்து மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் செபமாலைதாசர் சபை அருட்தந்தை ஜோசப் அவர்களின் தலைமையில் பண்பாட்டு திருப்பலியும் இடம்பெற்றன.

தொடர்ந்து 17ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் பொங்கல்விழா கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

மன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளின் நடனம், சட்டத்தரணி ஜொணி மதுரநாயகம் அவர்களின் கவிதை அளிக்கை, திருமறைக்கலாமன்ற கலைஞர்களின் மரபுவழி நாடகப்பாடல்கள் என்பவற்றுடன் திருமறைக்கலாமன்ற இளையோர் அவையினரின் “வேட ஜாலம்” நவீன நாடகமும் மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணரும் ஈழத்து தமிழ் கலைஞர் ஒன்றிய தலைவருமான வைத்திய கலாநிதி சிவபாலன் சிவன்சுதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin