யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான ஒத்திகைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் இவ் ஆற்றுகையில் பங்குபற்ற விரும்புபவர்கள் வருகின்ற 18ஆம் திகதி புதன்கிழமை நாளை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞான சுரபி தியான இல்லத்தில் நடைபெறவுள்ள பிரதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு திருப்பாடுகளின் ஆற்றுகை ‘காவிய நாயகன்” என்னும் பெயரில் எதிர்வரும் பங்குனி மாதம் 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை மாலை 6.45 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற அரங்கில் பிரமாண்டமான மேடையமைப்புடன் ஆற்றுகை செய்யப்படவுள்ளது.

By admin