யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்பள்ளி அதிபர் அருட்சகோதரி ரீனா டயஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களால் கைவினை பொருட்கள், மரக்கறி வகைகள், பழவகைகள், குளிர்பானம், உணவுப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், கற்றல் உபகரணங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை ஆலோசகர் அருட்சகொதரி மெற்றில்டா வசந்தி மற்றும் யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தலைவி லுமினா போல்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin