யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆங்கில தின நிகழ்வு புரட்டாதி மாதம் 03ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆங்கிலமொழி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கான பரிசளிப்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களின் ஆக்கங்களை தாங்கிய Familian Blossom நூலின் 10ஆவது இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோப்பாய் கல்வியியற் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. சிவசுப்ரமணியம் முகுந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.