யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2025,26ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு ஜப்பசி மாதம் 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து கல்லூரியின் அருட்தந்தை ஜோய் கிறிசோஸ்தம் கேட்போர் கூடத்தில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கடந்த கல்வியாண்டில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கலும் புதிய கல்வியாண்டிற்கான ஆரம்ப விரிவுரையும், இடம்பெற்றதுடன் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றது.

ஆரம்ப விரிவுரையை “விற்கன்ஸ்ரைனின் (Wittgenstein) மெய்யியல் நோக்கில் பல்சமய உரையாடல்” என்னும் தலைப்பில் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யேசுராஜ் குருஸ் அவர்கள் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள், அருட்சகோதர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin