யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு கார்த்திகை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை பருத்தித்துறை பங்கில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சிறுவர்கள் தும்பளை மரியன்னை ஆலயத்திலிருந்து தும்பளை புனித லூர்து அன்னை கெபிக்கு நடைபவனிசென்று அங்கு நடைபெற்ற சிறுவர் மற்றும் முதியோருக்கான விளையாட்டுக்களில் பங்குபற்றினர்.
விளையாட்டுக்களை திரு. பாஸ்கரன், திரு. யோசப்பாலா, திருத்தொண்டர் ஜோன் கில்டன், திரு. இயூஜின், திரு. நீலாம்பரன் ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தினர்.
தொடர்ந்து சிறார்களால் முதியோர் கௌரவிக்கப்பட்டதுடன் சிறார்கள் மற்றும் முதியோருக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.
பருத்தித்துறை பங்குத்தந்தையும் மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் 200ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

