யாழ்ப்பாண மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட மறையாசிரியர் இணைப்பாளர் அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், தவக்கால சிந்தனை, நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் என்பன இடம்பெற்றன.
சிலுவைப்பாதை தியானத்தை யாழ். புனித மரியன்னை பேராலய உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களும் நந்கருணை வழிபாட்டை குருநகர் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்களும் நெறிப்படுத்தியதுடன் தவக்கால சிந்தனையை கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிறாஜ் அவர்களும் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த 140ற்கும் அதிகமான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

