யாழ்ப்பாண கல்வி வலயத்தினால் யாழ். வலய பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்ட காற்பந்தாட்ட போட்டி 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி யாழ். மத்திய கல்லூரி அணியை 04:01 கோல் கணக்கில் வெற்றி பெற்று யாழ்ப்பாண கல்வி வலய சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அத்துடன் யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதிற்குட்பட்ட மென்பந்து துடுப்பந்தாட்ட போட்டியும் கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை கோப்பாய் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதியாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குறிக்கப்பட்ட 06 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் பதிலுக்கு 40 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சென் பற்றிக்ஸ் கல்லூரி 04.03 பந்து பரிமாற்றங்களில் 40 ஓட்டங்களைப் பெற்று 09 இலக்குகளால் வெற்றிபெற்றது.