உலக உணவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரசாயன பாவனையற்ற உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம் முன்பாக நடைபெற்றது.

நிறுவன இயக்குனர் அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட செயலர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து விற்பனை நிலையங்களை திறந்துவைத்ததுடன் யாழ். புனித மடுத்தீனார் சிறய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம், ரலீம் மௌலவி, சர்வமத பேரவை அங்கத்தவர் ஸ்ரீலோகநாத குருக்கள் ஆகியோர் கலந்து ஆசியுரைகளையும் வழங்கியிருந்தனர்.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் யாழ்ப்பாண மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திரு. ஸ்ரீறங்கன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin