முழங்காவில் புனித மரியன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி கண்காட்சி கார்த்திகை மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்விப் பொறுப்பாளர் டொன்பொஸ்கோ சபை அருட்சகோதரி மேரி அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செலஸ்ரின் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.
இக்கண்காட்சியில் திருப்பலியின் மகத்துவம், திருவருளடையாளங்களின் செயற்பாடு, புனிதர்களின் வரலாறு, திருச்செபமாலையின் பலன்கள், திருவிவிலிய நூல்களின் பாரம்பரியங்கள் மற்றும் நற்செய்திகளின்படி இயேசுவின் புதுமைகள், உவமைகள், பாடுகள், மரணம் உயிர்ப்பு என்பவை காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோரிகள், பங்குமக்கள், மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களென பலரும் கலந்துகொண்டனர்.

