2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி முன்னெடுக்க்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் சார்பாக தென்கயிலை ஆதீன குருவினால் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.

தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தல் நிகழ்வில் சமயத்தலைவர்கள், பொதுமக்களென 10000ற்கும் அதிகமானவர்கள் கலந்து, தமிழ் இனப்படுகொலையை உலகிற்கு வெளிப்படுத்தி அதற்கான நீதியைகோரி இறந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது 140,000ற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளனரென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திடம் மன்னார் மறைமாவட்டத்தின் முன்நாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு ஜோசப் அவர்களினால் கையளிக்க்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

By admin