முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவை கூட்டம் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மறைக்கோட்ட பங்குகளின் செயற்பாடுகள் மற்றும் ஆலய ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களால் “நாமும் புனிதராக மாறலாம்” என்னும் தலைப்பில் புனித கார்லோ அக்குட்டீஸ் பற்றி சிறப்புரையும் ஆற்றப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் பங்கு பிரதிநிதிகளென 60 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

 

By admin