மன்னார் முருங்கன் டொன் போஸ்கோ ஆங்கில மொழிமூல பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி மாசி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை பிரியங்கன் மார்க் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் மாணவர்கள் பொஸ்கோ, சாவியோ, றூவா என மூன்று இல்லங்களாக பிரிந்து போட்டிகளில் பங்குபற்றினர்.
இப்போட்டியில் றூவா இல்லம் முதலாமிடத்தையும் சாவியோ இல்லம் இரண்டாமிடத்தையும் பொஸ்கோ இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.

