திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய பாடகர் குழாமினரால் முன்னெடுக்கப்பட்ட “முத்தம்” தியாகத்திற்கு ஆராதனை நிகழ்வு சித்திரை மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

கெஸ்தமனி தொடங்கி இயேசுவின் காயங்களின் முத்தம் வரை இடம்பெற்ற நிகழ்வுகள் கதைகூறல், ஆராதனை பாடல் மற்றும் தியான உரைகள் ஊடாக காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் கலந்துகொண்டார்.

அத்துடன் ஆலய இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இறையிரக்க ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் ரஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற
இத்தியானத்தில் தியான உரை, நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் என்பவை இடம்பெற்றன. இத்தியானத்தை கப்புச்சின் சபை அருட்தந்தை அமல உதயன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

By admin