சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முதல்நன்மை பெறவுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கான கருத்தமர்வு 12ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிள்ளைகளும் பெற்றோரும் தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்திற்கு கள அனுபவ பயணம் மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற கருத்தமர்வு, விளையாட்டுக்கள், திருச்செபமாலை, திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினார்கள்.
கருத்தமர்வை நிரந்தர மறையாசிரியர் ஜெயசீலன் அவர்களும் விளையாட்டுக்களை அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி அருளினி அவர்களும் நெறிப்படுத்தியிருந்தனர்.