மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு யூலை மாதம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாசன் சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி மற்றும் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட், திரு. ஜான்கவி, செல்வி டொறின் ஆகியோர் வளவாளர்களாக கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 24 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin