மட்டக்களப்பு மறைமாவட்டம் நாவற்குடா புனித சின்ன லூர்து அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட “மீட்பின் பயணம்” பாஸ்கா நாடகம் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
82 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு திருத்தல வளாகத்தில் மேடையேற்றப்பட்ட இந்நாடகத்தை அருட்தந்தை யேசுதாசன் அவர்கள் நெறியாள்கை செய்ததுடன் திருமதி றமாஜினி துஸ்யந்தன், திரு. கில்பேட் அருள்தாஸ் ஆகியோர் உதவி நெறியாள்கை செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் பங்குமக்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.