கனடா, ரொறன்ரோ, மிசிஸ்ஸாகா புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் முன்னெடுத்த மிட்லண்ட் மறைசாட்சிகளின் திருத்தலம் நோக்கிய திருப்பயணம் யூலை மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பணியக பரிபாலகர் அருட்தந்தை கனீசியஸ் ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை திருச்செபமாலை, ஒப்புரவு அருட்சாதனம் என்பவற்றுடன் புனித ஆரோக்கிய அன்னை பங்கின் பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நற்கருணை வழிபாடும் இடம்பெற்றது.
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு யூபிலி திருப்பலி இடம்பெற்றதுடன் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பயண நிகழ்வில் கனடாவின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் கத்தோலிக்க மற்றும் இந்து சமய மக்கள் பங்குபற்றியிருந்தனர்.