மாரீசன்கூடல் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி மாரீசன்கூடல், போயிட்டி, சேந்தாங்குளம் ஊடாக வாழ்வகம் மடு அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

இத்தியானத்தை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர்கள் அருட்தந்தை துஸ்யந்தன் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை தர்சன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

அத்துடன் மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருட்சகோதரி செறின் அவர்கள் நெறிப்படுத்திய இத்தியானத்தில் குழுச்செயற்பாடுகள், சிலுவைப்பாதை, தியானப்பயிற்சி என்பன இடம்பெற்றன.

 

By admin