ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட, “மாபெரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் மாநாடு” கார்த்திகை மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மலேசியா நாட்டின் பெனாங்க் நகரில் நடைபெற்றது.
கருதினால் லூயிஸ் அன்டோனியோ தாக்ளே அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், செபங்கள், உரைகள், கலந்துரையாடல்கள், பண்பாட்டு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
32 நாடுகளைச் சேர்ந்த கருதினால்கள், ஆயர்கள், குருக்கள், துறவிகள் பொதுநிலையினரென 900ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றிய இம்மாநாட்டில் யாழ். மறைமாவட்டத்திலிருந்து திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களும் கலந்துகொண்டார்.

