மானிப்பாய் ஸ்ரீ சத்ய சாய் பாடசாலை ஒளிவிழா மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் செல்வி சாந்தினி மாணிக்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்கள் பிரதம விருந்தினராகவும் மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

