மானிப்பாய் புனித அன்னாள் ஆலய புனித மிக்கேல் வானதூதர் பீடப்பணியாளர் மன்றவிழா புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை பீடப்பணியாளர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இக்கலைநிகழ்வில் கவிதை, பேச்சு, பாடல் போன்றவை இடம்பெற்றதுடன் இளவாலை மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளர் அருட்தந்தை ஞானறூபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் சபை மேலாளர் அருட்சகோதரி மேரி அமலி கியோமர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் ஆலய அருட்பணி சபை செயலாளர் திருமதி தர்மினி பாலேந்திரா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin