மானிப்பாய் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா ஐப்பசி மாதம் 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்லில் நடைபெற்ற இப்பயணத்தில் மாணவர்களும் மறையாசிரியர்களும் பலாலி விமான நிலையம், ஊறணி புனித அந்தோனியார் ஆலயம், மயிலிட்டி துறை, காரைநகர் கசூரினா கடற்கரை, மாதகல் புனித லூர்து அன்னை திருத்தலம் ஆகிய இடங்களை பார்வையிட்டதுடன் திருத்தலத்தில் ஆசிரியர் தின விழாவையும் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் 120 மாணவர்களும் 15 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.
