மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் பெற்றோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் பங்கில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருணோதய கலையரங்க முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் மற்றும் குருமட மாணவர்கள் கலந்து கருத்துரைகள், பாடல், குழுச்செயற்பாடுகள் ஊடாக பங்கேற்பாளர்களை வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 60ற்கும் அதிகமான மாணவர்களும் பெற்றோரும் பங்குபற்றி பயனடைந்தனர்.

