மானிப்பாய் திருக்குடும்ப சபை சிறார்களும் இளையோரும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

அருட்சகோதரி நீற்றா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களும் இளையோரும் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட யூலாலி இல்லத்தை தரிசித்து அங்குள்ள வயோதிப அருட்சகோதரிகளுக்கு கலைநிகழ்வுகளையும் விளையாட்டுக்களையும் நடாத்தியதுடன் அவர்களுக்கான அன்பளிப்புக்களையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் 43 சிறார்களும் இளையோரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin