மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கல்லூரி அதிபர் அருட்சகோதரி நீற்றா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

வலிகாம வலய உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் திரு. குமரசூரியர் செந்தில்குமரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். கொழும்புத்துறை புனித சூசையப்பர் வித்தியாலய ஆசிரியர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வின்சன்ட் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மன்னார் கட்டையடம்பன் றோ.க.த.க வித்தியாலய ஆசிரியர் அருட்சகோதரி ரஜனா செல்லத்தம்பி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், அயற் பாடசாலை அதிபர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin