மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கால்கோள் விழா தை மாதம் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் ஒன்றிற்கு இணையும் புதிய மாணவர்களுக்கான வரவேற்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்கள் பிரதம விருந்தினராகவும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. தவபாலன் ரவிமோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மானிப்பாய் அருணோதய முன்பள்ளி ஆசிரியர் திருமதி கலிஸ்ரா சுபானந்தன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
அத்துடன் பாடசாலை தைப்பொங்கல் விழா தை மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்களும் பரிசளிப்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க பாடசாலை ஆசிரியர் திருமதி சிவராஜினி வரதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும் பாடசாலை ஒளிவிழா மார்கழி மாதம் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் புலமைப்ரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் ஆசிரியர்களுக்கான சேவை நயப்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

