மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிழ்வின் ஆரம்பத்தில் ஆசிரியர்கள் ஒளி கொடுத்து மண்டபத்திற்குள் அழைத்துவரப்பட்டு தொடர்ந்து அவர்களுக்கான கௌரவிப்புக்களும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்துடன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர், முதியோர் தின நிகழ்வும் ஐப்பசி மாதம் 01ஆம் திகதி பாடசாலை முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விளையாட்டுக்களும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் விளையாட்டுக்கள் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றது.
மேலும் பாடசாலையின் வாணிவிழா நிகழ்வும் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் வாணிவிழாவை முன்னிட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளுக்கான அனுசரணையை நோர்வே நாட்டில் வாழும் பாடசாலையின் பழைய மாணவர் திரு. சந்தியாப்பிள்ளை சைமன் அவர்களின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.

By admin