யாழ்ப்பாணம் மானிப்பாய் சென்ற் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் பாடசாலை தினம், ஆங்கில தினம், தமிழ் தினம், பாடசாலையின் பெயர்கொண்ட விழா மற்றும் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஜம்பெரும் விழா யூலை மாதம் 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை, கோட்ட, வலய மற்றும் மாகாண மட்ட தமிழ், ஆங்கில தினப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் பாடசாலை பெயர் கொண்ட விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் 2024ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வலிகாம கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் திரு. ஆனந்தஜெயேந்திரன் சஞ்ஜீவன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அமலமரித் தியாகிகள் சபை புனித வளனார் சிறிய குருமட நிதியாளர் அருட்தந்தை குளோட் மரினோ அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். திருக்குடும்பக் கன்னியர் மட ஆசிரியர் திருமதி கிருபாமேரி வசீகரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டதுடன் வலிகாம கல்வி வலய நடனபாட ஆசிரிய ஆலோசகர் திருமதி. ஸ்ரீதேவி கண்ணதாசன், நல்லாயன் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகள், முன்னாள் ஆசிரியர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.
இப்பாடசாலை மாணவிகளான செல்வி கபினா விஜயராசா அவர்கள் 2024ஆம் ஆண்டு கா.பொ.த சாதரண தர பரீட்சையில் 6A B 2C பெறுபேற்றை பெற்றுக்கொண்டதுடன் செல்வி ஜெசிபில் றிசா ஜான்சன் அவர்கள் மாகாண மட்ட ஆங்கில Recitation போட்டியில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.