மாதகல் புனித தோமையார் முன்பள்ளி ஒளிவிழா மார்கழி மாதம் 15ஆம் திகதி திங்கட்கிழமை மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
முன்பள்ளி முதல்வர் அருட்சகோதரி மேரி றோஸ், ஆசிரியர்கள் திருமதி யூடித்ஜெகதீஸ்வரி மற்றும் செல்வி டொறிஸ் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் மாதகல் பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரர்தாஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களென பலரும் கலந்துகொண்டனர்.

