மாதகல் புனித தோமையார் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா யூன் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள் பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.