மாதகல் புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை புங்குடுதீவு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

