இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு புரட்டாதி மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருவுளப்பணியாளர் சபை இலங்கை மாவட்ட முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் – சணா – அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து 45 மாணவத்தலைவர்களுக்கு சின்னங்களை சூட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களென பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் புரட்டாதி மாதம் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரி மதுரம் சதுக்கத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 35 மாணவத்தலைவர்களுக்கு சின்னங்கள் சூட்டிவைக்கப்பட்டன.

By admin