மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து புதிய பங்குப்பணிமனைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
ஆலய வளாகத்தில் புதிதாக அமையவுள்ள பங்குப் பணிமனைக்கான நிதி அனுசரணையை உள்நாட்டு வெளிநாட்டு பங்குமக்கள் வழங்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

