மல்வம் திருக்குடும்ப ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யூன் மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் இவ் ஆயத்த நாட்களில் சிறுவர்கள், விடலை பருவத்தினர், இளையோர், தந்தையர், மரியாயின் சேனையினர், வழிபாட்டு குழுவினருக்கான கருத்தமர்வுகளும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பிலிப் ரஞ்சணகுமார் அவர்களின் தலமையில் நடைபெற்றன.

தொடர்ந்து 05ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழாவும் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவிழாவும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் 2024ஆம் ஆண்டு தேசிய விவிலிய தேர்வில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் மல்வம் றோ.க பாடசாலையில் அதிபராக கடமையாற்றி மாற்றலாகி செல்லும் திரு. றூபதன் அவர்களின் பிரியாவிடையும் தொடர்ந்து திரு. புவனதாஸ் அவர்களின் எழுத்துருவில் ஆலய பாடகர் குழாம் மற்றும் பங்குமக்களினால் பாடப்பட்ட திருக்குடும்பத்தின் 12 ஆராதனை பாடல்களை உள்ளடக்கிய “நசரேத்தூர் இயேசு” இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றன.

தொடர்ந்து 07ஆம் திகதி திங்கட்கிழமை ஆலய மக்களின் ஏற்பாட்டில் கொடிமரம் இறக்கும் நிகழ்வுடன் இணைந்த தோழமை விருந்தும் அங்கு இடம்பெற்றன.

By admin