மறைக்கோட்டங்களில் இயங்கும் மறையாசிரிய நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு மார்கழி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் புதிய நிர்வாகத்தெரிவும் நடைபெற்றன.
நிர்வாகத்தெரிவில் யாழ்ப்பாணம் மறைக்கோட்ட மறையாசிரியர் திரு. ஜான்கவி அவர்கள் தலைவராகவும் கிளிநொச்சி மறைக்கோட்ட மறையாசிரியர் செல்வி. லூரிஸ் மேரி அவர்கள் செயலாளராகவும் தீவக மறைக்கோட்ட மறையாசிரியர் திரு. டால்டன் அவர்கள் பொருளாளராகவும் முல்லைத்தீவு மறைக்கோட்ட மறையாசிரியர் செல்வி. மேனகா அவர்கள் உப தலைவராகவும் பருத்தித்துறை மறைக்கோட்ட மறையாசிரியர் திரு. ஜெகன் அவர்கள் உபசெயலாளராகவும் இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர் செல்வி. மேரி ஸ்பெரன்ஸி அவர்கள் உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

